வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.
இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.
வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, 13 January 2017
Popular Posts
-
தாயின் தாலாட்டு கேட்கவில்லை செல் ஒலியே எனக்கு தாலாட்டு செல் வந்த பூமியில் நடைபிணமாக வாழ்ந்தேன் என்றுமே விடியவில்லை எம்தேசம்
-
இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க...
-
போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது .வாட்...
-
புகைப்பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், அவை நிரந்தர பிறழ்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஸையன்ஸ் என்ற ச...
-
பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து...
-
பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமடைக...
-
தேவையான பொருட்கள் கோதுமை மா - 500 g சீனி - 100 g ஆப்பிள் - 06 பழம் எண்ணெய் - 1 போத்தல் ஈஸ்ட் - 1 தே கரண்டி வனிலா - 2 தே கரண்டி சுடுதண்ணீர் ...
-
சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள்...
-
உலகின் ௬ரை வானம் உலகின் மெத்தை முகில்கள் இரவில் ஒளி சந்திரன் இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம் அடடா இயற்கையின் அழகே தனிடா
0 comments:
Post a Comment